×
Saravana Stores

செனட் குழு ஒப்புதல் பாக். உச்ச நீதிமன்றத்தில் இனிமேல் 25 நீதிபதிகள்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 17ல் இருந்து 25 ஆக உயர்த்தும் தீர்மானத்தை சுயேச்சை செனட் உறுப்பினர் அப்துல் காதிர் சமீபத்தில் தாக்கல் செய்தார். இது, செனட் நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாக்., மக்கள் கட்சியை சேர்ந்த பாரூக் நயீக் தலைமையிலான இந்த குழு, நேற்று முன்தினம் கூடி, தீர்மானம் குறித்து ஆலோசித்தது. இதன் தொடர்ச்சியாக, தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிப்பதென முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து செனட் சபை விவாதத்துக்கு, இந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்படும். இதற்கிடையே, நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முக்கிய முடிவுகளை தனக்கு சாதகமாக எடுக்கும் நோக்கில், நீதித்துறையின் குரல்வளையை நெரிக்க, அரசு சதி திட்டம் தீட்டியுள்ளதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.

The post செனட் குழு ஒப்புதல் பாக். உச்ச நீதிமன்றத்தில் இனிமேல் 25 நீதிபதிகள்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Senate Committee ,Supreme Court ,Islamabad ,Senate ,Abdul Qadir ,Pakistan ,Senate Standing Committee ,Pak ,People's Party ,Dinakaran ,
× RELATED நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய...