பாகிஸ்தான் அதிபருக்கு காலில் எலும்பு முறிவு

துபாய்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி(69) துபாய்க்கு கடந்த புதன்கிழமை சென்றார். துபாய் ஏர்போர்ட்டில் விமானத்தில் இருந்து படிவழியாக இறங்கிய போது அவர் தவறி விழுந்தார். இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடிதுடித்த சர்தாரி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவருக்கு மாவு கட்டு போடப்பட்டது. அவர் 4 வாரங்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

The post பாகிஸ்தான் அதிபருக்கு காலில் எலும்பு முறிவு appeared first on Dinakaran.

Related Stories: