விழுப்புரத்தை சேர்ந்த இளம்பெண் பிரசவத்தின்போது உயிரிழப்பு

புதுச்சேரி, அக். 29: விழுப்புரம் மாவட்டம் கப்பூர் பகுதியை சேர்ந்தவர் திவ்யா (28). இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷாஜி டொமினி (31) என்பவரை காதலித்து கடந்த 2022ம் ஆண்டு திருமண செய்து கொண்டார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யா, விழுப்புரத்தில் உள்ள அவரது தாயார் வீட்டில் தங்கி, புதுச்சேரி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையில் சில தினங்களுக்கு முன்பு திவ்யா பிரசவத்திற்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கடந்த 27ம் தேதி அதிகாலை திவ்யாக்கு பிரசவ வலி ஏற்பட்டு, பெண் குழந்தை பிறந்தது. பிரவசத்தின்போது திவ்யாவின் பனிக்குடம் உடைந்து, அவரது ரத்தத்தில் கலந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த அவருடைய குடும்பத்தினர், மருத்துவமனையில் கதறி அழுத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து ஷாஜி டொமினி ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விழுப்புரத்தை சேர்ந்த இளம்பெண் பிரசவத்தின்போது உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: