உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் இயற்கை வளம் சுற்றுச்சூழல் மாதிரி சந்தை

 

ஜெயங்கொண்டம், அக். 25: உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இயற்கை வளம், சுற்றுச்சூழல் குறித்து மாணவிகளின் மாதிரி சந்தை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் முனைவர் முல்லை க்கொடி தலைமை வகித்தார். ஆசிரியர் இங்கர்சால் முன்னிலை வகித்தார்.

மாதிரி சந்தையில் காய்கறி, பழங்கள்,மளிகைபாபொருட்கள்,வீட்டுஉபயோகப்பொருட்கள், உணவுப்பொருட்கள் மூலிகைப்பொருட்கள்,சர்பத்கடை, மண்பாண்டம் ஆகியவற்றை வைத்திருந்தனர் ,ஆசிரியர்களும், மாணவிகளும் காசு கொடுத்து பொருட்களை வாங்கிசென்றனர்.

இந்த மாதிர்சந்தையை செய்வதற்கு ஊக்கப்படுத்திய ஆசிரியை மரகதத்தையும், வாணியையும் தலைமையாசிரியர் பாராட்டி வாழ்த்தினார், நிகழ்வில் ஆசிரியர்கள் சாந்தி, சங்கீதா, சுரும்பார்குழலி, கவிதா பாவை.சங்கர் தமிழாசிரியர் இராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர், முடிவில் கணித ஆசிரியை தமிழரசி நன்றி கூறினார்.

The post உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் இயற்கை வளம் சுற்றுச்சூழல் மாதிரி சந்தை appeared first on Dinakaran.

Related Stories: