13 பவுன் நகை கொள்ளை

சிங்கம்புணரி, அக். 25: சிங்கம்புணரி அருகே எஸ் புதூர் ஒன்றியம் வலசைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (68). இவர் குடும்பத்தினருடன் சென்னையில் தங்கி டீக்கடை நடத்தி வருகிறார். விசேஷ நாட்களுக்கு மட்டும் சொந்த ஊர் வரும் அவர் நேற்று வலசைபட்டியில் உள்ள வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பீரோவில் 13 பவுன் நகைகளும், ரூ.3 லட்ச ரொக்கம் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 13 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: