தர்மபுரி, அக்.25: தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில், அஷ்டமி விழாவையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அதிகாலையில் விஸ்வரூப தரிசனம், கணபதி ஹோமம், 64 பைரவர் ஹோமம் நடந்தது. காலை 8.30 மணியளவில் பைரவர் உற்சவமூர்த்தி கோயிலை வலம் வந்து விபூதி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் சாம்பல் பூசணி மற்றும் நெய்விளக்கேற்றி வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்திருந்தது. இதில் தர்மபுரி மட்டுமின்றி கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
The post காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை பக்தர்கள் திரண்டனர் appeared first on Dinakaran.