இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு அக்.1 முதல் 23ம் தேதி வரை ஒப்பிடும்போது இந்த ஆண்டு இதுவரை அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டில் பீர் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் விற்பனை அதிகரித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் பீர் விற்பனை குறைந்தாலும், கன்னியாகுமரியில் 9.41 சதவீதமும், தூத்துக்குடியில் 7.42 சதவீதம் மற்றும் திருநெல்வேலியில் 4.59 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. 8 மாவட்டங்களில் 15 சதவீதத்திற்கு மேலாக விற்பனை சரிந்துள்ளது.
பருவமழை காலங்களில் பீர் விற்பனை மந்தமாக இருப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் வரும் நாட்களில் தீபாவளி பண்டிகை, தொடர் விடுமுறை வருவதால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து கடைகளிலும் தேவைக்கு கூடுதலாக மதுபானங்களை கையிருப்பில் வைக்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தடுக்க மாவட்ட அளவில் தனிக் குழு அமைத்து கடைகளை கண்காணிக்க மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பீர் விற்பனை குறைந்த மாவட்டங்கள் (கேஸ்கள் விற்பனையான அளவு)
மாவட்டம் 2023ம் ஆண்டு அக்.1 முதல் 23 வரை
விற்பனை 2024ம் ஆண்டு அக்.1 முதல் 23 வரை
விற்பனை வித்தியாசம் சதவீதம்
நாகப்பட்டினம் 29,617 20,778 8,839 29.85
திருவாரூர் 24,305 17,815 6,490 26.70
திருப்பூர் 1,09,378 88,868 20,510 18.75
கடலூர் 55,688 45,405 10,283 18.47
விழுப்புரம் 81,592 66,998 14,594 17.89
The post அக்டோபர் மாதத்தில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை 10 சதவீதம் குறைவு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.