×
Saravana Stores

தஞ்சையில் தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கம் 63-வது அமைப்பு தினம்

தஞ்சாவூர், அக். 23: தஞ்சையில் தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கம் 63-வது அமைப்பு தின நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் முருகானந்தம் தலைமையில் நடந்தது. துணை மாநில வரி அலுவலர் சந்தானம் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வடக்கு வட்ட செயலாளர் அஜய்ராஜ், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க கொடியை முன்னாள் மாநில செயலாளர் காமராஜ், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் கொடியை அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி, அரசு ஊழியர் சங்க கொடியை மாவட்ட செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் ஏற்றி வைத்தனர். முடிவில் வணிகவரி பணியாளர் சங்கம் அருள்ராஜ் நன்றி கூறினார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சையில் தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கம் 63-வது அமைப்பு தினம் appeared first on Dinakaran.

Tags : 63rd Foundation Day ,Tamilnadu Commercial Tax Employees Association ,Thanjavur ,63rd Organization Day ,Tamilnadu Commercial ,Tax Employees ,Association ,Muruganandam ,Deputy State Revenue Officer ,Santhanam ,Tamil Nadu Government Employees Union North Circle ,Secretary… ,Tamil Nadu Commercial Tax Employees Union 63rd Organization Day ,Dinakaran ,
× RELATED தலைமை அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு துவங்கிய குழந்தைகளுக்கு சான்றிதழ்