சூட்டிங் இல்லாத நேரத்தில் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு ஜாலியாக நண்பர்களுடன் மோட்டார் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்த சூழலில், அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. அது என்னெவென்றால் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற கார் பந்தய அணியை நடிகர் அஜித் தொடங்கியதுதான்.
‘அஜித்குமார் ரேஸிங்’ அணி ஐரோப்பாவில் நடைபெறும் 24 எச் கார் பந்தயத்தில் போர்ஷே 992 ஜிடி3 கப் பிரிவில் பங்கேற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோ வெளியாகியுள்ளது. அதில், அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுனராக அஜித் செயல்டுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அஜித்துடன் மேலும் 3 கார் ரேஸர்கள் இடம்பெற்றுள்ளனர்.
The post கார் ரேஸிங்கில் மீண்டும் களமிறங்கும் நடிகர் அஜித்; ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோ வெளியானது! appeared first on Dinakaran.