×

மதுராந்தகம் தெற்கு பைபாஸ் நெடுஞ்சாலையில் சேதமடைந்திருந்த நடை மேம்பாலம் அகற்றும் பணி தீவிரம்: நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை

மதுராந்தகம், அக். 18: மதுராந்தகம் தெற்கு பைபாஸ் நெடுஞ்சாலையில் சேதமடைந்திருந்த நடை மேம்பாலத்தை அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள
னர். மதுராந்தகம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய ஒன்றிய அமைச்சர் டி.ஆர்.பாலு தனது மேம்பாட்டு நிதியிலிருந்து நடை பாதை மேம்பாலம் அமைக்கப்பட்டது. அந்த நடை மேம்பலம் தற்போது, முழுமையாக சேதமடைந்து மக்கள் பயன்படுத்த முடியாதநிலையில் எந்த நேரத்திலும் உடைந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படுத்தக் கூடிய நிலையில் இருந்தது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், அந்த நடைமேம்பாலத்தை உரிய பாதுகாப்புடனும் வாகனங்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் காஸ் வெல்டிங் மூலம் வெட்டி எடுத்து கிரேன் உதவியுடன் அகற்றும் பணி நேற்று நடந்தது. இதனால், அந்த பகுதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நடைமேம்பாலத்தை அகற்றிய பிறகு, இப்பகுதியில் கார், இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரும் வகையில் நெடுஞ்சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், இன்னும் சில தினங்களில் சுரங்கபாதை அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

The post மதுராந்தகம் தெற்கு பைபாஸ் நெடுஞ்சாலையில் சேதமடைந்திருந்த நடை மேம்பாலம் அகற்றும் பணி தீவிரம்: நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Madurathangam South Bypass Highway ,Highways Department ,Madhurantagam ,National Highways Department ,Madhurantagam South Bypass Highway ,Madhurandakam Chennai – ,Trichy National Highway ,Union ,Maduraandakam South Bypass Highway ,Dinakaran ,
× RELATED திருத்தணியில் நெடுஞ்சாலைத்துறை...