×

செங்கல்பட்டு அருகே கனரக லாரி மோதி 5 வாகனங்கள் சேதம்: போலீசார் விசாரணை

செங்கல்பட்டு, அக்.17: செங்கல்பட்டு அருகே அதிவேகமாக வந்த கனரக லாரி மோதியதில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகி சேதம் அடைந்தது. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கனரக லாரி சிங்கபெருமாள்கோவில் அருகே மெல்ரோசாபுரம் பகுதியில் அதிவேகமாக நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது, கனரக லாரி சிக்னலில் நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ, இரண்டுகள் கார்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் போலீசார் விபத்தில் காயமடைந்த ஐந்து பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் காரின் முன் மற்றும் பின் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதனை தொடர்ந்து விபத்தில் சிக்கிய கனரக லாரி, ஆட்டோ, வேன், இரண்டு கார்கள் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து ஐந்து வாகங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post செங்கல்பட்டு அருகே கனரக லாரி மோதி 5 வாகனங்கள் சேதம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chennai ,Trichy ,Melroshapuram ,Singaperumal ,Dinakaran ,
× RELATED அத்தியாவசிய பொருட்கள் கூடுதல்...