×

சித்தராமையா மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு முறைகேடு புகாரில் சிக்கிய மூடா தலைவர் ராஜினாமா

பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கி கொடுத்தது. மூடா மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில் முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன் சுவாமி மற்றும் நிலத்தை விற்ற தேவராஜு ஆகிய நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்து லோக்ஆயுக்தா இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

மூடா முறைகேடு வழக்கில் விசாரணையை எதிர்கொண்டுவரும் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜ வலியுறுத்திவரும் நிலையில், மூடா தலைவர் கே.மரிகவுடா ராஜினாமா செய்துள்ளார். மூடா தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளருக்கு நேற்று கடிதம் எழுதினார். தனது ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மரிகவுடா, ‘முதல்வர் சித்தராமையாவின் வழிகாட்டுதலின் பேரில் நான் ராஜினாமா செய்தேன். அதுமட்டுமல்லாது எனக்கு உடல்நல பிரச்னைகளும் உள்ளது. அதனால் தான் ராஜினாமா செய்தேனே தவிர, எனக்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை. ’ என்றார்.

The post சித்தராமையா மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு முறைகேடு புகாரில் சிக்கிய மூடா தலைவர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Siddaramaiah ,Muda ,BENGALURU ,Mysuru Municipal Development Corporation ,Chief Minister ,Parvati ,Dinakaran ,
× RELATED நில முறைகேடு வழக்கு ஆதாரங்களை...