செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் சாலை வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும்

 

செம்பனார்கோயில், அக்.16:மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோயில் வழியாக ஆக்கூர் முக்கூட்டு வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில், அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயில், திருவிடைக்கழி பாலசுப்பிரமணியர் கோயில், சுதந்திர போராட்ட தியாகியான தில்லையாடி வள்ளியம்மை பெற்றோர் பிறந்த இடமான தில்லையாடியில் வள்ளியம்மையின் நினைவு மண்டபம், வரலாற்று புகழ் பெற்ற தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, தரங்கம்பாடி கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும், பொதுமக்களும் சென்று வருகின்றனர். மேலும் பல்வேறு பணிகள் தொடர்பாக மயிலாடுதுறை, செம்பனார்கோயில், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கும் பிரதான சாலையாக உள்ளது. மேற்படி சாலையில் ஆக்கூர் ஆசாத் தெரு பகுதியில் அடுத்தடுத்து 2 சாலை வளைவுகள் உள்ளன. ஆனால் இந்த வளைவுகளின் முன்பகுதியில் வேகத்தடை இல்லை. இதனால் வாகனங்கள் வேகத்துடன் திரும்பும்போது விபத்து ஏற்படுமோ என வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.

The post செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் சாலை வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: