உத்தமபாளையத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்

தேனி, அக். 16: உத்தமபாளையம் தாலுகாவில், மாவட்ட கலெக்டர் தலைமையில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் இன்று (அக். 16) நடக்க உள்ளது. இன்றும், நாளையும் நடைபெறும் முகமாமில் கலெக்டர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் அப்பகுதியில் தங்கி அரசின் சேவைகள், திட்டங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றினை கள ஆய்வு மேற்கொள்ளும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடக்க உள்ளது.

இம்முகாமில் உத்தமபாளையம் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, விபத்து நிவாரணம், ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, விவசாயத்துறை மற்றும் இதரத் துறைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

The post உத்தமபாளையத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: