மாநில அளவிலான கபடி போட்டி ஈரோடு மாவட்டம் முதலிடம்

கமுதி, அக்.16: கமுதி அருகே தோப்படைப்பட்டி முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியை பால்வளத்துறை மற்றும் கதர் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்த போட்டியில் சென்னை, நாமக்கல், கோவை, மதுரை, தென்காசி, ஈரோடு, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் ஈரோடு மாவட்டம் மற்றும் பரமக்குடி எஸ்.எம்.பி பெண்கள் அணிகள் மோதின.

இதில் ஈரோடு மாவட்ட பெண்கள் அணியும் முதல் இடம் பிடித்தது. இந்த அணிக்கு ரூ.40 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த பரமக்குடி ஸ்.எம்.பி. அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசும், மூன்று மற்றும் நான்காவது இடம் பிடித்த ராமநாதபுரம் ஏ.பி.எல் அணி, நாமக்கல் மாவட்ட சேதர்பாளையம் அணிகளுக்கு தலா ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை தோப்படைப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

The post மாநில அளவிலான கபடி போட்டி ஈரோடு மாவட்டம் முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: