×

போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

தொண்டி, அக்.15: தொண்டி ஜாக் தவ்ஹீத் மர்கஸ் சார்பில், தொண்டி வட்டாணம் ரோடு மற்றும் மக்கள் கூடும் இடங்களில் மதுவுக்கு எதிரான பிரசாரம் செய்யப்பட்டது. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்கிறார்கள்.  ஆனால் இளைஞர்களோ மதுவின் கையில் மாட்டிக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை மிகக் குறுகிய காலத்திலேயே முடித்துக் கொள்கிறார்கள். இதனால் குடும்பத்தார்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டு செல்லக்கூடிய சூழ்நிலை காண முடிகிறது. தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பல்வேறு தரப்பிலும் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்தி வருவது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவின் முதுகெலும்பு ஊனமாக்கப்படும் நிலை உருவாகி விடும். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஜாக் தவ்ஹித் ஜமாத் தொண்டி கிளையின் சார்பில்.

போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசுரங்கள் மற்றும் செல்போன் ஏற்படுத்தும் விளைவுகள், செல்போன் பயன்படுத்துவது பற்றியான விழிப்புணர்வு ஏற்படும் பாதிப்புகள், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு எதிரான பிரசுரங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியிலே வழங்கப்பட்டது. இதில் தொண்டி ஜாக் தவ்ஹீத் மர்கஸ் தலைவர் அகமது பாய்ஸ், மௌலவி அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Thondi ,Jack Dawheet Markus ,Thondi Vattanam Road ,India ,
× RELATED தடைவலை மீன்பிடிப்பால் அழிந்து வரும் மீன்வளம்