ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. பாஜ 29 இடங்களையும், மெகபூபா முக்தியின் பிடிபி கட்சி 3 இடங்களிலும் வென்றன. இந்த நிலையில் தேசிய மாநாட்டு கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தேசிய மாநாட்டு கட்சி சட்டப்பேரவை தலைவராக அக்கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா வரும் புதன்கிழமை பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post காஷ்மீர் முதல்வராக அக்.16ல் பதவியேற்கிறார் உமர்அப்துல்லா appeared first on Dinakaran.