×

கார்களில் கடத்த முயன்ற 93 செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 5 பேர் கைது

திருமலை: நெல்லூர் அருகே கார்களில் கடத்த முயன்ற 93 செம்மரக்கட்டைகள் அதிரடிப்படை போலீசார் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை எஸ்.பி.வாஸ், திருப்பதி எஸ்.பி.சுப்பாராயுடு தலைமையில் போலீசார் நேற்று, நெல்லூர் மாவட்டம் சோமசிலா- அனந்தசாகரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்களில் 4 பேர் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், மற்றொருவர் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர்கள் அங்கு செம்மரக்கட்டைகள் 2 கார்களில் கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது. உடனே கார்களுடன் அங்கிருந்த 93 செம்மரக்கட்டைகளை அதிரடிப்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கார்களில் கடத்த முயன்ற 93 செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Action Force ,Semmarakats ,Nellore ,Tirupathi Chemmaraktadthal Preventive Action Force ,S. B. Vaz ,Tirupathi S. B. Police ,Subarayud ,Nellore district ,Dinakaran ,
× RELATED ஒரேநாளில் அதிக `பாலோயர்ஸ்’ ஆசைக்காக...