×

சிறப்பு வகுப்பு நடத்திய ஆசிரியர் மீது தாக்குதல்

சின்னசேலம், அக். 11: சின்னசேலம் அருகே ஈரியூர் கிராமம், மாங்குளம் செல்லும் சாலைபகுதியில் வசித்து வருபவர் மனோகரன்(62). இவர் பெருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார். மேலும் இவர் தற்போது அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவியும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் வழக்கம்போல கடந்த 8ந்தேதி மாலை 5.30 மணியளவில் பள்ளி முடிந்து மனோகரன் தனது மனைவியுடன் வெளியே வந்தார். அப்போது அதே ஊரைச்சேர்ந்த முருகன் என்பவர் மனோகரனை பார்த்து ஏன் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு வைக்கிறீர்கள். இனிமேல் வைக்கக்கூடாது என்று அசிங்கமாக திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ்மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆசிரியர் மனோகரன் புகாரின்பேரில் கீழ்குப்பம் போலீசார், முருகன்மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

The post சிறப்பு வகுப்பு நடத்திய ஆசிரியர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Attack on teacher ,Chinnasalem ,Manokaran ,Mankulam, Eriyur ,Perumangalam Government Higher Secondary School ,Dinakaran ,
× RELATED விஏஓவை அலுவலகத்தில் வைத்து பூட்டிய உதவியாளர்