×

இ.கம்யூனிஸ்ட் வட்டக்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி, அக்.11: பர்கூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் மோகன் தலைமை வகித்தார். துணை செயலாளர் சின்னசாமி, கட்சியின் மத்திய, மாநில குழு முடிவுகள் குறித்தும், தேசிய, மாநில அரசியல் நிலை குறித்தும் விளக்கி பேசினார். மாநில குழு உறுப்பினர் கண்ணு, கட்சி கிளை செயல்பாடுகள் குறித்தும், வருங்கால வேலைகள் குறித்தும் பேசினார். விவசாய சங்க மாவட்ட தலைவர் சிவராஜி, விவசாயிகள் பிரச்னைகள் குறித்து பேசினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வட்ட செயலாளர் வெங்கடேஷ், துணை செயலாளர் கமலேஷ், வட்டக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். வட்ட துணை செயலாளர் சத்தீஷ் நன்றி கூறினார்.

The post இ.கம்யூனிஸ்ட் வட்டக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : E. Communist circle ,Krishnagiri ,Communist Party of India ,Parkur ,Mohan ,Deputy Secretary ,Chinnaswamy ,E.Communist ,Dinakaran ,
× RELATED அமித்ஷா பதவி விலக கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்