×

கள்ள நோட்டு கொடுத்து கால் டாக்ஸி டிரைவரிடம் மோசடி

சென்னை: வடபழனியில் கால் டாக்ஸி டிரைவரிடம் ரூ.7000 கள்ள நோட்டுகளை கொடுத்து மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வடபழனியில் இருந்து மகாபலிபுரம் செல்ல வேண்டும் எனக் கூறி புக்கிங் செய்த மர்ம நபர் கைவரிசை காட்டியுள்ளார். கார் புறப்பட்ட சிறிது நேரத்தில் டீ குடிக்கலாம் என ஓட்டுனர் கோவிந்தராஜிடம் கூறியுள்ளார் மர்ம நபர். ரூபாய் நோட்டு உள்ளது, அதை வைத்துக் கொண்டு ஜி பே மூலம் பணம் அனுப்புமாறு கோவிந்தராஜிடம் மர்ம நபர் கூறினார். ஓட்டுனர் கோவிந்தராஜ் g pay மூலம் ரூ.7000 அனுப்பிய சில நொடிகளில் டீக்கடையில் நின்ற அந்த நபர் மாயமாகியுள்ளார்.

The post கள்ள நோட்டு கொடுத்து கால் டாக்ஸி டிரைவரிடம் மோசடி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Vadapalani ,Mahabalipuram ,Dinakaran ,
× RELATED மழை வெள்ள பாதிப்பை தடுக்க குறுகிய...