ஒரத்தநாடு: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாட்டில் அரசு மேல்நிலை பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு திருவையாறை சேர்ந்த முத்துக்குமரன் (35) என்ற ஆசிரியர் 10, 11, 12ம் வகுப்புக்கு கணிதப்பாடம் எடுத்து வருகிறார்.
இவர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஆக.12ம் தேதி புகார் வரவே சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினர் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியதில், 43 மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினர், விசாரணை அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் கொடுத்தனர். அதன்பேரில், கணித ஆசிரியர் முத்துக்குமரன் கடந்த ஆக.14ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் முத்துக்குமரனைஒரத்தநாடு போலீசார் நேற்று கைது செய்தனர்.
The post 43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பள்ளி ஆசிரியர் கைது appeared first on Dinakaran.