- பயிற்சி
- ஈச்சங்கோட்டை அரசு பள்ளி
- ஒரத்தநாடு
- ஈச்சங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி
- ஒரத்தநாடு தீயணைப்பு துறை
- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி ஈச்சங்கோட்டை
- வடகிழக்கு பருவமழை போலி பயிற்சி
- ஈச்சங்கோட்டை அரசு பள்ளி
- தின மலர்
ஒரத்தநாடு, அக். 9: ஒரத்தநாடு அருகே ஈச்சங்கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் ஒரத்தநாடு தீயணைப்புத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தீத்தடுப்பு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு உட்பட்ட ஈச்சங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தீத்தடுப்பு செயல் விளக்கம் மற்றும் வடகிழக்கு பருவமழை போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர்.அதன் பிறகு தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் குழுவினர்களுடன் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் அனந்தசயனன் மற்றும் தீயணைப்புத் துறையினர்கள் கலந்து கொண்டனர்.
The post ஈச்சங்கோட்டை அரசு பள்ளியில் வடகிழக்கு பருவமழை போலி ஒத்திகை பயிற்சி appeared first on Dinakaran.