×

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

ரிஷிவந்தியம், அக். 9: கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாசார், கீழ்பாடி பகுதியில் மதுபாட்டில் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்படி, ரிஷிவந்தியம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்தியசீலன் தலைமையில் போலீசார் அந்தந்த பகுதியில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாசார் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் ராமு (56) என்பவர் வீட்டின் பின்புறத்தில் 7 மதுபாட்டில், கீழ்பாடி கிராமத்தை சேர்ந்த உண்ணாமலை மனைவி சரோஜா (54) என்பவர் வீட்டின் அருகில் 7 மதுபாட்டில், பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 2 நபர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

The post மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Rishivanthiyam ,Killapadi ,Pasar ,Rishivanthiyam police station ,Kallakurichi district ,Rishivanthiam Police Station ,Assistant Inspector ,Sathyaseelan ,Dinakaran ,
× RELATED ஹீரோ ஆனார் ரோபோ சங்கர்