×

கடலூரில் பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபரை கைது செய்த போலீசார்!

கடலூர்: கடலூரில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மலை புது நகரை சேர்ந்தவர் குப்பன் மகன் ராஜ்கமல் (24). இவர் கடந்த சில மாதங்களாக கடலூர் புதுப்பாளையம் திருமலை நகரில் ஒரு வீட்டை வாடகை எடுத்து அங்கு தங்கி இருந்தார்.

இவர் தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் புதுப்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ராஜ் கமல் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ராஜ்கமலை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடியுடன் அவரை கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ராஜ்கமல் மீது கடலூர் முதுநகர், புதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்கமலுக்கு கஞ்சா உபயோகப்படுத்தும் பழக்கம உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் அவர் தனது வீட்டில் கஞ்சாவை உபயோகப்படுத்தி விட்டு மீதி இருந்ததை தூக்கி எறிந்துள்ளார். அதில் இருந்த ஏதோ ஒரு விதை ஒன்று கஞ்சா செடியாக முளைத்துள்ளது. இதை பார்த்த ராஜ்கமல் அதை பூந்தொட்டியில் வளர்த்து வந்துள்ளார்.

The post கடலூரில் பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபரை கைது செய்த போலீசார்! appeared first on Dinakaran.

Tags : Bunhoti ,Cuddalore ,Kuppan ,Rajkamal ,Thirupatripuliur Hill New Town ,Thirumalai Nagar, Cuddalore Pudupalayam ,
× RELATED தென்பெண்ணை ஆற்றில் 2 பச்சிளம் குழந்தைகள் உடல் மீட்பு