×

ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு

ஜம்மு: ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத், 6000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கையில் காலை முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. அதில் ஜூலானா சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளரும், ஒலிம்பிக் வீராங்கனையுமான வினேஷ் போகத் காலை முதல் முன்னிலை பெற்று வந்தார்.

அதன்பின், சிறுது நேரம் பின்னடைவை சந்தித்த அவர் அதன்பிறகு மீண்டும் முன்னிலைப் பெற்று வந்தார். இந்த நிலையில், தற்போது காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் 6,000-திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை வீழ்த்தி வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றியை காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

The post ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vinesh Bhogat ,Julana ,Jammu ,Kashmir ,Haryana ,Dinakaran ,
× RELATED அரியானா ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் மீண்டும் முன்னிலை..!!