×

கோடம்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்களிடம் கத்தி முனையில் வழிப்பறி: 5 பேருக்கு வலை

சென்னை: கோடம்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்களை கத்திமுனையில் மிரட்டி, செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்து சென்ற 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வரும் மணிகண்டன் (21), கலைசீலன் (20), லூடோ கிறிஸ்டின் (21), ஜெர்வின் அகிலன் (21) ஆகியோர், சூளைமேடு வீரபாண்டி நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, இவர்கள் 4 பேரும் சினிமா பார்த்துவிட்டு, பைக்கில் தங்களது அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கோடம்பாக்கம் சிவன் கோயில் தெரு வழியாக சென்றபோது, இவர்களை வழிமறித்த 5 பேர், கத்தி முனையில் மிரட்டி, செல்போன்கள் மற்றும் 3,500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் அளித்த புகாரின் பேரில், கோடம்பாக்கம் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று 5 வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

The post கோடம்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்களிடம் கத்தி முனையில் வழிப்பறி: 5 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Kodambakkam ,CHENNAI ,Manikandan ,Kalaiseelan ,Ludo Christine ,Nungambakkam ,
× RELATED உருவத்தில் ஒரே மாதிரியாக இருந்ததால்...