×

வாலிபரை வழிமறித்து பணம், செல்போன் பறிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (24). இவர் செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனது மாமியார் வீட்டிற்க்கு சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மறைமலைநகர் பகுதியில் அடையாளம் தெரியாத 3 நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் திடீரென ஆனந்தன் வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.3000 மற்றும் அவர் வைத்திருந்த செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிட்டு சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஆனந்தன் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் மாமியார் வீட்டிற்க்கு சென்று வீடு திரும்பும்போது மறைமலைநகர் பகுதியில் வழிப்பறி சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வாலிபரை வழிமறித்து பணம், செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Anandan ,Karayambedu ,Chengalpattu district ,Matravancheri ,Pulipakkam ,Nāraimalainagar ,
× RELATED இலவச வீட்டுமனை பட்டா வழங்காததால் சலவை தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு