×

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

சாத்தூர், அக்.5: இருக்கன்குடி அணையில் இளைஞர்கள் ஆர்வத்துடன் தூண்டில் போட்டு மீன்பிடித்து வருகின்றனர். சாத்தூர் அருகே இருக்கன்குடி நீர்த்தேக்கத்திற்கு கடந்தாண்டு பெய்த பருவமழையின் காரணமாக கோல்வார்பட்டி, வெம்பக்கோட்டை நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் வந்தது. அணை நீரில் அதிகளவு மீன்கள் இருப்பதால் கரை பகுதியில் அப்பகுதி இளைஞர்கள் தூண்டில் மூலம் மீன் பிடித்து வருகின்றனர்.

இது குறித்து இளைஞர்கள் கூறுகையில், தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் நாங்கள் அனைவரும் தூண்டிலிட்டு மீன் பிடிக்கிறோம்.  சில சமயம் பெரிய மீன்கள் கிடைக்கும். பெரும்பாலும் சிறிய அளவில் ஜிலேபி மீன்கள் மட்டும் கிடைக்கிறது. சுமார் 2 மணி நேரம் காத்திருந்தால் இரண்டு கிலோவில் இருந்து மூன்று கிலோ வரை மீன்கள் கிடைக்கிறது. அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றனர்.

The post ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள் appeared first on Dinakaran.

Tags : Chaturthi ,Iankudi Dam ,Kolvarpatti, Wembakota Reservoir ,Iankudi Reservoir ,Chaturur ,
× RELATED சங்கடஹர சதுர்த்தி பூஜை