×

மாற்றுத்திறனாளிகள் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தேனி, அக். 5: மதுரையில் வருகிற 9ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான மண்டல அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி பெறும் நோக்கில் மண்டல அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களையும் தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது.

தேனி மாவட்டத்தை உள்ளடக்கிய மதுரை மண்டல அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 9ம் தேதி மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் வேலைநாடும் மாற்றுத் திறனாளிகள் வருகிற 7ம் தேதி வரை உள்ள அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை 04546-252085 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயர்பதிவு செய்து கொள்ளலாம். இம்முகாமில் தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையலாம் என தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாற்றுத்திறனாளிகள் தனியார் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Private Employment Camp ,Theni ,Madurai ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED தேனி சாலையை சீரமைக்க கோரிக்கை