×

அங்கன்வாடியில் புகுந்த நாகப்பாம்பு

தேன்கனிக்கோட்டை, டிச.19: தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அந்தேவனப்பள்ளி கிராமத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த குழந்தைகளுக்கு உணவு மற்றும் ஆரம்ப கால கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையில், சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், உடனடியாக குழந்தைகளை மீட்டு, பக்கத்தில் உள்ள அறையில் அமர வைத்தனர். பின்னர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், பள்ளியின் மேற்கூரையில் பதுங்கியிருந்த நாகப்பாம்பை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதைன காப்பு காட்டில் விடுவித்தனர்.

The post அங்கன்வாடியில் புகுந்த நாகப்பாம்பு appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Thenkani Kottai ,Andhevanapalli ,Anganwadi center ,
× RELATED உரக்கடை உரிமையாளர் மாயம்