×

ரூ.20,000 லஞ்சம் துணை தாசில்தார் அதிரடி கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமம், மங்கம்மாள் புரத்தை சேர்ந்தவர் கணேசன். இவர், 2002ல் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமியிடமிருந்து 94 செண்டு நிலத்தை கிரையம் பெற்றுள்ளார். பட்டாவில் ‘கிருஷ்ணமூர்த்தி’ என்று தவறுதலாக இருந்த பெயரை திருத்தம் செய்ய கணேசனின் மகன் மோகன், லால்குடி துணை தாசில்தார் ரவிக்குமாரை(60) கடந்த 26ம் தேதி அணுகியபோது ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ரூ.20 ஆயிரத்தை நேற்று மதியம் மோகன், துணை தாசில்தார் ரவிக்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த போலீசார் துணை தாசில்தார் ரவிக்குமாரை கைது செய்தனர்.

The post ரூ.20,000 லஞ்சம் துணை தாசில்தார் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Ganesan ,Lalkudi Circle Love, Mangammal Purath ,Krishnasamy ,Srirangata ,Krishnamurthi ,Patta ,
× RELATED திருச்சி மாநகரில் முக்கிய சாலைகளை...