8 பள்ளிகள், கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி: திருச்சியில் 8 பள்ளிகள் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கல்லூரி ஆகியவற்றின் அலுவலக மெயிலுக்கு நேற்று காலை 9 மணியளவில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சற்று நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் குறுஞ்செய்தி வந்தது. இதனால் பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையிட்டதில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் மாணவர்கள் வரவில்லை. இதேபோல் காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று திறக்கப்பட இருந்த காட்டூரில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிக்கும் இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பெற்றோரின் செல்போனுக்கு விடுமுறை என தகவல் அனுப்பியதால் மாணவர்கள் வரவில்லை.

போலீசார் சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதுகுறித்து திருச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், ‘ஸ்வேதா கிருஷ்ணன்’ என்ற பெயரில் 8 பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது தெரிய வந்தது. போலி ஐடியை உருவாக்கி வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதா அல்லது வெளிநாட்டில் இருந்து மிரட்டல் மெயில் வந்ததா? என்று விசாரணை நடக்கிறது.

The post 8 பள்ளிகள், கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: