ஆர்.எம்.கே.வி சார்பில் 11 தனித்துவ அடையாளங்களுடன் புதிய பட்டுப்புடவைகள் அறிமுகம்

சென்னை: ஆர்.எம்.கே.வி நிறுவனம் கடந்த நூறாண்டுகளாக தனித்துவமிக்க 100 புடவைகளுக்கு மேல் அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்த வருடம் மேலும் 11 புத்தம் புதிய தனித்துவமான அடையாளங்களோடு உருவாக்கப்பட்ட புடவைகளை அறிமுகப்படுத்துகிறது. இயற்கை வண்ண புடவைகள் தொகுப்பில், உலகில் முதன்முறையாக 4000 விதவிதமான இயற்கை வண்ண பட்டு புடவைகளை அறிமுகப்படுத்துகிறது.

சங்க இலக்கியத்தில், குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ் நிலத்தின் 99 பூக்களை பட்டு புடவையில் ஜரிகையால் நெய்து தனித்துவமான புடவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கை வண்ணத்தில் பாரம்பரிய முறையில் வண்ணம் ஏற்றப்பட்டு முந்தானையில் ஜரிகையால் கற்பக விருட்சம் நெய்யப்பட்ட அழகிய பட்டு புடவை, பீச் பஸ் எனப்படும் செஞ்சந்தன வண்ண புடவை, இரு வண்ணக் கலவையோடு கலம்காரி டிசைன்கள் கொண்ட புடவை, மொஹல் மண்டலா குறியீடுகளும் இணைத்து நெய்யப்பட்ட புடவை, புஜோடி முறையில் நெய்யப்பட்ட புடவை, நீலமும் பச்சையும் கலந்த வண்ணத்தில் 11 இன்ச் பார்டரோடு பாரம்பரிய கமலம் மற்றும் பன்னீர் செம்பு புட்டாக்கள் நெய்யப்பட்டு உருவாக்கப்பட்ட புடவைகள்.

காப்புரிமை பெற்ற லினோ நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி இருக்கும் இந்த பட்டுப் புடவைகள் வழக்கமான பட்டுப் புடவைகளில் இருந்து 40% எடை குறைவாக இருப்பதோடு அணிவதற்கு இலகுவாகவும் காற்றோட்டம் கொண்டதாகவும் உருவாக்கி இருப்பது தனிச்சிறப்பு. கைநெசவில் உருவான லினோ கட் ஒர்க் பட்டு புடவை பாரம்பரியமிக்க பார்ட்டிலி புடவைகளின் சாயலில் லினோ நுட்பத்தில் நெய்யப்பட்ட பட்டு புடவை, டிஸ்யூ பாணியில் கிரிம்சன் வண்ணத்தில் பாரம்பரியமிக்க பட்டு புடவை, மொஹல் மோட்டிப்கள் மீனா காரி வேலைப்பாடுகளால் மெருகூட்டப்பட்டு, கோடுகளால் அலங்கரிக்கப்பட்டு அழகியலோடு உருவாக்கப்பட்ட பட்டு புடவை உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என ஆர்எம்கேவி நிர்வாக இயக்குனர் சங்கர குமாரசுவாமி தெரிவித்தார்.

The post ஆர்.எம்.கே.வி சார்பில் 11 தனித்துவ அடையாளங்களுடன் புதிய பட்டுப்புடவைகள் அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: