காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள்

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், அகரம்மேல் ஊராட்சி கிராமசபை கூட்டம் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு பெருந்தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விளக்கிப் பேசினார். மேலும், பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்து மனுக்களைப் பெற்று, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஏ.ஜி.ரவி, துணைத் தலைவர் புவனேஸ்வரி, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பரிவாக்கம் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வே.தணிகாசலம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை ஒழிக்கவும், அவர்களைப் பாதுகாக்கவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கி கவுரவப்படுத்தினர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவகாமி சுரேஷ், துணைத் தலைவர் ராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நசரத்பேட்டை ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் திவ்யா பொன்முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுத்தல், ஜல்ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், முறையான சுத்தமான குடிநீர் வழங்குவது, மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி சங்கர், துணைத் தலைவர் சித்ரா துரை மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள் appeared first on Dinakaran.

Related Stories: