கிரகங்களே தெய்வங்களாக அருள்பாலிக்கின்றன. அதுபோலவே, தெய்வங்களும் கிரகங்களுக்குள் சில தருணம் அடைபட்டுக்கொள்கிறது. அவ்வாறே, ஒவ்வொரு ராசி மற்றும் லக்னக்காரர்களுக்கு உகந்த குபேர சம்பத்தை பெறும் திருத்தலங்களும் உண்டு.
அவ்வாறே, மேஷம் ராசி மண்டலத்திற்குரிய வேலூரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் ஆவார். இத்திருத்தலம் 1400 வருடங்கள் பழமையானது. கி.பி. 8ம் நூற்றாண்டில் சம்புவராய மன்னரால் கட்டப்பட்டது. இங்கு நரசிம்மரின் மடியில் லட்சுமி தேவி அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். லட்சுமி என்றால் சுக்கிரன்; நர என்றால் சிம்மம் சூரியன் என்று பொருள். ஆகவே, சுக்ரன், சனி, சூரியன் , செவ்வாய் இணைவுகளால் இந்த தெய்வத்திற்கு இந்த நாமம் உண்டானது. இத்திருதலத்தில் தயிர், மஞ்சள் நிற இனிப்புகளை சுவாமிக்கு நிவேதனம் செய்து பிறகு அந்த நிவேதனத்தை இங்குள்ள குரங்குகளுக்குத்தானமாக கொடுத்து வர கடன் பிரச்னைகள் சிறிது சிறிதாக அடைபடும்.
மேஷ லக்னக்காரர்களுக்கான குபேர சம்பத்தை பெற
இக்கோயிலில் சனிக்கிழமை அன்று சுவாமிக்கு நல்லெண்ணெயும் தேங்காய் எண்ணெயும் அபிஷேகமாக செய்து அதனுடன் பன்னீர் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் பட்டு வஸ்திரம் தருவித்து புளிப்பும் இனிப்பும் கலந்த ஜிலேபியை சுவாமிக்கு நிவேதனமாக படைத்து அதனை அங்குள்ளவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர தானமாக உணவையும் கொடுத்து வர மேஷ லக்னக்காரர்களுக்கு தனஸ்தானம் பலம் பெறும். அதோடு குபேரனின் அனுகிரகத்தை பெறுவர். அதாவது, தொடர்ந்து தடையில்லா பணவரவை பெறுவதுதான் குபேர சம்பத்திற்குரிய ஆற்றலாகும்.
பிள்ளை வரம் வேண்டுவோர்
சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் பிரத்யோக பூஜை நடக்கிறது. அதுமட்டுமின்றி ரத சப்தமி விழாவும் இத்தலத்தில் பிரசித்தியாகும். கோயிலில் அனுமன் பால ஆஞ்சநேயராக காட்சியளிக்கிறார். இந்த பால ஆஞ்சநேயருக்கு வெண்ணெயில் செய்த பலகாரத்தையும் கோதுமையில் செய்த பலகாரத்தையும் அனுமனுக்கு நிவேதனமாக படைத்து பின்பு இங்குள்ள குரங்குகளுக்குக் கொடுத்துவர புத்திரபாக்கியம் பெறுவர்.
The post மேஷ லக்னக்காரர்கள் குபேர சம்பத் பெறும் திருத்தலம் appeared first on Dinakaran.