×

ஓசூர்- தர்மபுரி 4 வழிச்சாலையில் மின் விளக்குகள் பொருத்தி சோதனை வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

ராயக்கோட்டை, அக்.2: ஓசூர்- தர்மபுரி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ராயக்கோட்டை வழியாக நடைபெறும் இப்பணியில் மேம்பாலம் கட்டும் பணியைத் தவிர இதர வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. ஆங்காங்கே அணுகு சாலை பணிகள் முடிந்து, வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளன. கிராமங்களை இணைக்கும் பகுதியில் உயர்மட்ட மின் கம்பங்கள் அமைத்து அதில் பல்புகளை பொறுத்தி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை எரியவிட்டு சோதனை மேற்கொண்டனர். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள புதிய சாலையில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளால் கிராம பகுதிகள் நகரங்களை போல காட்சியளிக்கிறது. இவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

The post ஓசூர்- தர்மபுரி 4 வழிச்சாலையில் மின் விளக்குகள் பொருத்தி சோதனை வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Hosur-Dharmapuri ,lane ,Rayakottai ,Hosur ,Dharmapuri ,Dinakaran ,
× RELATED மண், கற்கள் எடுக்க அனுமதியில்லை; குமரி 4...