×

மண், கற்கள் எடுக்க அனுமதியில்லை; குமரி 4 வழி சாலை பணிகள் முடக்கம்.! 1.5 ஆண்டில் 28 சதவீதம் மட்டுமே நிறைவு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நான்குவழி சாலை பணிக்கு மண், கற்கள் எடுக்க மாவட்ட நிர்வாகம் கை விரித்ததால், பணிகள் முடங்கியுள்ளன. இதனால் ஒன்றரை ஆண்டில் 28 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளன. இந்தியா முழுவதையும் நான்குவழி சாலைகள் மூலமாக ஒன்றிணைக்க அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் தங்க நாற்கர சாலை திட்டம் 2004ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. வாஜ்பாயின் கனவு திட்டமான இந்த நான்குவழி சாலை திட்டத்திற்கு இந்தியாவிலேயே முதன்முதலாக கன்னியாகுமரி ஜீரோ பாயின்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் 2004ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அடிக்கல் நாட்டப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பணிகள் தொடங்க நீதிமன்ற வழக்குகள், நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை காரணமாக காலதாமதம் ஏற்பட்டு வந்தது. தமிழகத்தின் பிற மாவட்டங்கள் ற்றும் மாநிலங்களில் இந்த சாலைகள் அமைக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு 4வழி சாலை பணிகள் எக்ஸ்பிரஸ் சாலையாக முற்றிலும் பாதிப்புகள் குறைந்த புதிய வழித்தடத்தில் காங்கிரீட் சாலையாக, காரோடு முதல் வில்லுக்குறி, வில்லுக்குறி – நாகர்கோவில், நாகர்கோவில் – கன்னியாகுமரி, நாகர்கோவில் பெருங்குடி (காவல்கிணறு விலக்கு) என 4 கட்டங்களாக தொடங்கின. எனினும் பசுமை தீர்ப்பாய வழக்கு காரணமாக பணிகள் தடைபட்டன. பின்னர் நீர்நிலைகளில் பாலங்கள் அமைத்து பணிகள் தொடர, பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதன்படி பணிகள் தொடங்கி 50 சதவீதம் முடிந்தாலும், மண் கிடைப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. கடந்த அதிமுக அரசு மண் கொண்டு வருவதில் போதிய ஒத்துழைப்பு வழங்காததால், பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் பணியை ஒப்பு கொண்டிருந்த எல்.அன்ட்.டி நிறுவனம் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதால், ஒன்றிய அரசுடன் பேசி ஒப்பந்தத்தை கைவிட்டது. ஒன்றிய அரசும் ₹240 கோடியை எல்.அன்ட்.டி நிறுவனத்திற்கு இழப்பீடாக வழங்கியது.

இந்நிலையில் நகாய் சார்பில் மீண்டும் 4வழி சாலை பணியை தொடங்க 25.11.2022 அன்று ₹1,041 கோடியில் (ஜிஎஸ்டி நீங்கலாக) டெண்டர் விடப்பட்டது. டெண்டர் திறப்பு தேதிகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, மார்ச் மாதம் டெண்டர் இறுதி செய்யப்பட்டு, தொழில்நுட்ப தகுதி பரிசீலிக்கப்பட்டு 4வழி சாலை பணிகள் தொடங்கின. பணிகள் ஒரே பேக்கேஜில் நடைபெறும் எனவும், 2025ல் பணிகளை நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கி ஒன்னரை ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது 28 சதவீதம் மட்டுமே பணிகள் முடிவடைந்துள்ளன. ெபரியப்பெரிய ஏற்ற இறக்கங்களுடன் இச்சாலை உள்ளதால், அதிகளவு மண் தேவையாக உள்ளது. ெநல்லை மற்றும் தூத்துக்குடியில் இருந்து மண் எடுத்து வர அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், ேகரளாவிற்கு தினசரி பல ஆயிரம் லோடு கனிமங்கள், விதிகளை மீறி கொண்டு ெசல்வதாக எழுந்த புகாரை அடுத்து ஆரல்வாய்மொழியில் வாகனங்கள் எடை போடப்பட்டு, அனுப்புவதால் ஒரு நாளைக்கு 3 லோடு கொண்டு வர வேண்டிய டாரஸ் லாரியில் ஒரு முறை மட்டுமே மண் மற்றும் பாறைகள் கொண்டு வர முடிகிறது. இதனால் பணிகளில் தொய்வு ஏற்பட்ட நிலையில், குமரியில் மண் எடுக்க 9 மனுக்கள் நகாய் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டது. இதில் 6 மனுக்கள் மண் எடுத்தால் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறி நிராகரிக்கப்பட்டன. மீதம் உள்ள 3 மனுக்கள் மீதும் இதுவரை முடிவுகள் மேற்கொள்ளவில்லை. தற்போதைய நிலவரப்படி 12 லட்சம் க்யூபிக் டன் மண் தேவையாக உள்ளது. ஆனால் மண் கிடைக்காமல் உள்ளதால், சாலை அமைக்க முடியாத நிலை உள்ளது.

இதனால் தற்ேபாது பாலங்கள் அமைக்கும் பணி மட்டுமே நடந்து வருகின்றன. மொத்தம் உள்ள 54 கி.மீ தொலைவில் இதுவரை 30 கி.மீ தொலைவிற்கு மட்டுமே சாலை அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 6 மாதங்களில் ஒப்பந்தப்படி சாலை அமைக்கும் பணி நிறைவு பெற வேண்டும். ஆனால் இன்னும் 72 சதவீத பணிகள் பாக்கி உள்ளன. இதனால் 4வழி சாலை பணிகள் திட்டமிட்டபடி விரைந்து முடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எல்.அன்ட்.டி நிறுவனம் போல தற்போது டெண்டர் மேற்கொண்ட நிறுவனங்களும், தாக்கு பிடிக்க முடியாமல் சென்று விடுமோ என்ற அச்சமும் சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் 4வழி சாலை பணிகள் துரிதமாக நடந்திட நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.

The post மண், கற்கள் எடுக்க அனுமதியில்லை; குமரி 4 வழி சாலை பணிகள் முடக்கம்.! 1.5 ஆண்டில் 28 சதவீதம் மட்டுமே நிறைவு appeared first on Dinakaran.

Tags : Kumari ,lane ,Nagercoil ,Kumari district ,India ,-lane ,Dinakaran ,
× RELATED நான்கு வழிச்சாலை – பழைய நெடுஞ்சாலை...