×

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

புதுச்சேரி, செப். 28: புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன், கைவினை கலைஞராக பணியாற்றி வருகிறார். இவர் சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மணல் சிற்பங்களை செய்து சாதனை படைத்துள்ளார். குறிப்பாக முன்னாள் குடியிரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 100 விதமான மணல் சிற்பங்கள் வடிவமைத்து உள்ளார். மேலும் ஆண்டுதோறும் வீராம்பட்டினம் கடற்கரையில் சுனாமி நினைவு அஞ்சலி மணல் சிற்பம் செய்து வருகிறார். இந்நிலையில் உலக சுற்றுலா தினத்தையொட்டி, புதுச்சேரி சுற்றுலா துறை சார்பில் மணல் சிற்பம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதன்படி நேற்று காலை முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் குபேந்திரன் உலக சுற்றுலா தினத்தையொட்டி மணல் சிற்பம் செய்துள்ளார். இதில் புதுவையில் ஆயி மண்டபம் மற்றும் முதல்வர் ரங்கசாமியின் முகம் வடிவமைத்து உள்ளார். இந்த சிற்பம் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக ஒரு வாரத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தை அரியாங்குப்பம் தொகுதி எம்எல்ஏ பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் மணல் சிற்பத்தை பிரமிப்புடன் பார்வையிட்டு சென்றனர்.

The post மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம் appeared first on Dinakaran.

Tags : Ai Mandapam ,Puducherry ,Kubendran ,Veerambattinam ,president ,APJ Abdul Kalam ,Aayi Mandapam ,Chief Minister ,
× RELATED புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்..!!