டாக்டரிடம் மோசடி செய்த இந்திய பெண் தூதர்


லக்னோ: உபி மாநிலம் லக்னோவில் உள்ள கோமதிநகரில் மருத்துவமனை நடத்தி வருபவர் மிருதுளா அகர்வால். இந்தோனேசிய நாட்டின் தூதராக உள்ள நிகாரிகா சிங், அவரது கணவர் அஜித் குப்தா ஆகியோர் ரூ.64 லட்சம் மோசடி செய்ததாக கோமதி நகர் போலீஸ் நிலையத்தில் மிருதுளா புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2016ம் ஆண்டு நிகாரிகாவும், அவரது கணவரும் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவர்களுடன் அறிமுகம் ஏற்பட்டது.

அஜித் குப்தா நடத்தி வரும் நிறுவனத்தில் முதலீடு செய்யும்படி அவர்கள் தன்னை வற்புறுத்தினார்கள். அதிக லாபம் கிடைக்கும் நிகாரிகா சொன்னதை நம்பி ரூ.51லட்சம் முதலீடு செய்தேன். ஆரம்பத்தில் முதலீடுகள் லாபத்தில் தான் இருந்தன. பின்னர் லாபம் எதுவும் தரவில்லை. ரூ. 64 லட்சம் மோசடி செய்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து லக்னோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post டாக்டரிடம் மோசடி செய்த இந்திய பெண் தூதர் appeared first on Dinakaran.

Related Stories: