வேலாயுதம்பாளையம், செப்.27: கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பின் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டில் மாவட்ட திமுக செயலாளர் செந்தில்பாலாஜியை 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் செந்தில்பாலாஜி வழக்கறிஞர் மூலமாக பல முறை இதுவரை கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது.
இதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். கரூரில் திமுக மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், மண்டல தலைவர் அன்பரசன், மாநகர துணைச் செயலாளர் வெங்கமேடு பாண்டியன், மாநகர பொருளாளர் அங்கு பசுபதி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் சாவி நல்லுசாமி, மாநகர் மாணவர் அணி அமைப்பாளர் இன்ஜினியர் அருள்முருகன், தொண்டரணி ஜிம் சிவா, ஊராட்சி மன்ற தலைவர்கள், வெள்ளியணை சுப்பிரமணி, ஆண்டாங் கோவில் மேற்கு பெரியசாமி, ஆத்தூர் செல்லை சிவா உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின், உதயநிதி, மாவட்ட கழக செயலாளர் செந்தில் பாலாஜி வாழ்க என கோஷம் எழுப்பினர்.
கரூர் மனோகரா கார்னர், திருக்காம்புலியூர் ரவுண்டனா, மக்கள் பாதை, லைட்ஹவுஸ் கார்னர், திருமாநிலையூர், தாந்தோணிமலை, ராயனூர், வெங்கமேடு, இனாம்கரூர், பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த திமுகவினர் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நேற்று கரூர் பகுதியில் உள்ள அனைத்து கோயில்கள், கிறிஸ்தவ ஆலயம், மசூதிகள் ஆகியவற்றில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
The post மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: கரூரில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.