கரூரில் வேளாண்மை துறையில் தொழில்நுட்ப மேம்பாடு கருத்தரங்கம்

கரூர், செப்.26: கரூர் ஒன்றிய அளவில் வேளாண்மை துறையில் தொழில்நுட்ப மேம்பாடு செயல்பாடுகள் குறித்த கருத்து அரங்கம் மற்றும் கலந்தாய்வு நடைபெற்றது. வேளாண்மை துறையில் விவசாயிகள் நல்ல லாபம் பெறுவதற்காகவும் உற்பத்தி செய்த வேளாண் பொருள்களுக்கு எவ்வாறு மதிப்பு கூட்டல் செய்து அதிக விலைக்கு விற்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் தமிழக முழுதும் ஒன்றிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன், அடிப்படையில் கரூர் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளர்கள் மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் காதப்பாறை வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு பயிற்சி மேலாண்மை கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் கரூர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளர் விவசாயிகள் முன்னிலை வகித்தனர். அப்போது, வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகசுந்தரம் வேளாண்மை துறையின் கீழ் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் பற்றியும், அட்மா திட்டத்தின் பயிற்சிகள் மற்றும் செயல்விளக்கங்கள் பற்றியும், உழவன் செயலி பயன் பாடுகள் பற்றியும், உயிர் உரங்களின் பயன்பாடுகள் பற்றியும் சிறுதானிய பயிர்கள் சாகுபடி முறைகள் பற்றியும், சிறுதானியத்தில் மதிப்பு கூட்டல் பற்றியும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கூறினார். வேளாண்மை விற்பனைத் துறை வேளாண்மை அலுவலர் அனிதா மதிப்புக் கூட்டல் பற்றியும், திட்டங்கள் பற்றியும், விளை பொருட்களின் விற்பனை செய்யும் முறைகள் பற்றியும், எவ்வாறு மதிப்பு கூட்டல் செய்தால் விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பது குறித்தும்,

பொருள்கள் குறிப்பிட்ட நாட்கள் வரை கெடாமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியும் திட்டங்கள் பற்றியும் கூறினார். வனத் துறை வனவர் அருணா தேவி மரக் கன்றுகள் நட்டு பாராமரிப்பதால் காடுகள் பாதுகாக்கப்பட்டு இயற்கை வளம் மேம்படுத்த மரம் வளர்ப்பதின் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். மேலும், விவசாயிகள் மரக்கன்றுகள் பெற தேவையான ஆவணங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு தெரிவித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் மாரிமுத்து நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சுரேஷ் மற்றும் நந்தினி ஆகியோர் செய்திருந்தனர்.

The post கரூரில் வேளாண்மை துறையில் தொழில்நுட்ப மேம்பாடு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: