கரூர், செப். 26: கரூர் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தைச் சேர்ந்த 5 பேரை வெள்ளியணை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். தொடர்ந்து, கரூர் மாவட்டத்திலும் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக போலீசார்களுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, கரூர் மாவட்ட போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டதில் கரூர் மாவட்டம், வெள்ளியணை மூக்கணாங்குறிச்சி அடுத்த தம்மநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் காட்டன் மில்லில் வங்க தேசத்தை சேர்ந்த 5 பேர் செப்டம்பர் 23ம் தேதி வேலைக்கு சேர்ந்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து, அங்கு பணியில் இருந்த வங்கதேசத்தை சேர்ந்த சிமில் உசேன்(24), அஜ்மீர்(22), ஜமீருல்(30), சைமீர்(27), ஆசிக்ஹசன்(22) ஆகிய ஐந்து பேரை வெள்ளியணை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கரூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 5 பேர் கைது appeared first on Dinakaran.