கொடைக்கானல், செப். 25: கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க வட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் பெருமாள் முன்னிலை வைத்தார். இதில் மாவட்ட செயலாளர்கள் ராமசாமி, அஜய் கோஸ், மாவட்ட தலைவர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஜோசப், நிர்வாகிகள் செந்தாமரை, சின்னு மற்றும் மேல்மலை கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் ஒன்றிய அரசு கொண்டு வந்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளையும், பொதுமக்களையும் வனத்துறையினர் வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், வனஉரிமை சட்டம் 2006ஐ அமல்படுத்த வேண்டும், வில்பட்டி, கோவில்பட்டி, சத்யா நகர் உள்பட அனைத்து மலைப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பட்டாக்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். தொடர்ந்து அனைவரும் தங்களது கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர். மேலும் இந்த கோரிக்கைகளை அமல்படுத்தாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.
The post கொடைக்கானலில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.