பிரட் – 4 துண்டு
துருவிய தேங்காய் – 1 கப்
நாட்டுச் சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 1/4 டீஸ்பூன்
பாதாம் மற்றும் முந்திரி – சிறிது (பொடியாக நறுக்கியது)
காய்ச்சி ஆற வைத்த பால் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றை துண்டுகளாக்கி மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பௌலில் அரைத்ததை எடுத்து, அத்துடன் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் தூள், துண்டுகளாக்கப்பட்ட பாதாம் மற்றும் முந்திரியை சேர்த்து கைகளால் பிரட்டி விட வேண்டும். பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி, கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும். பின்னர் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ளதை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான பிரட் பால்ஸ் தயார்.
The post பிரட் பால்ஸ் appeared first on Dinakaran.