ஜனநாயகத்தில் விமர்சனங்களை பொறுத்து கொள்வதே மிகப்பெரிய சோதனை: நிதின் கட்கரி பேச்சு

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள எம்ஐடி உலக பல்கலை கழகத்தில் நேற்று முன்தினம் நடந்த நூல் வௌியீட்டு நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “ஜனநாயகத்தின் மிகப்பெரிய சோதனை என்பது ஒரு அரசன் தனக்கு எதிரான விமர்சனங்களை பொறுத்து கொண்டு, அதை சுயபரிசோதனை செய்ய வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை கருத்து வேறுபாடுகள் என்பது ஒரு பிரச்னை இல்லை.

கருத்துகளே இல்லாமல் இருப்பதுதான் பிரச்னை. நாங்கள் வலதுசாரிகளும் இல்லை. இடதுசாரிகளும் இல்லை. சந்தர்ப்பவாதிகள். எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் எந்த அச்ச உணர்வுமின்றி கருத்துகளை வௌிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீண்டாமை, சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் மேன்மை குறித்த கருத்துகள் நீடிக்கும் வரை தேசத்தை கட்டியெழுப்பும் பணி முழுமை அடைந்து விட்டதாக கூற முடியாது” என்று தெரிவித்தார்.

The post ஜனநாயகத்தில் விமர்சனங்களை பொறுத்து கொள்வதே மிகப்பெரிய சோதனை: நிதின் கட்கரி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: