கிருஷ்ணராயபுரம், செப்.20: கிருஷ்ணராயபுரம் அருகே முனையனூரில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவி குழுவினருக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சித்தலவாய் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் முனையனூரில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி வட்டார வளர் பயிற்றுநர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இதில் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு அரசால் வழங்கப்படும் பல்வேறு கடன் உதவி திட்டங்கள் மற்றும் தொழில் தொடங்க பயிற்சிகள் குறித்தும் விளக்கிக் கூறினர். நிகழ்ச்சியில் வட்டார வளர் ஒருங்கிணைப்பாளர் செல்வராணி மற்றும் சுய உதவிக் குழு மகளிர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post முனையனூரில் மகளிர் குழுவினருக்கு புத்தாக்க பயிற்சி appeared first on Dinakaran.