முத்துப்பேட்டை,செப்.18: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐஐஎப்எல் சமஸ்தா நிதி நிறுவனம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தீபக் தலைமை தாங்கினார்.
பாலமுருகன், அருண்பிரகாஷ், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் வரவேற்புரை வரவேற்று பேசினார், நிகழ்ச்சியில், மண்டல மேலாளர் ரமேஷ் கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியின், இறுதியில் பள்ளி ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.
The post முத்துப்பேட்டை அருகே பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல் appeared first on Dinakaran.