அறந்தாங்கி,செப்.18: திருச்சியில் நடைபெற்ற கராத்தே கருப்பு பட்டை போட்டி தேர்வில் புதுக்கோட்டை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். திருச்சி எஸ்கேடபுயூஎப் கராத்தே தலைமை பயிற்சி அலுவலகத்தில் கராத்தே சங்கர் மற்றும் மாஸ்டர் பத்மா தலைமையில் நடைபெற்ற கருப்பு பட்டை 2வது டிகிரி 1வது டிகிரிக்கான தேர்வு நடைபெற்றது. இந்த போட்டி தேர்வில் புதுக்கோட்டை எஸ்கேடபுயூஎப்-ன் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் ராமலிங்கம், அரிகரன், குகன் 2-வது டிகிரியும் மணிவாசன், சகாய் ரெனிஸ், விஷால், திஸ்வர், வினு பாலாஜி, சதீஷ், துர்கா தேவி, பாலசுபிக்சன், பாலசிவாணி, முதலாவது டிகிரியும் பெற்று வெற்றி பெற்றனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தகுதி பட்டயம் மற்றும் சான்றிதழையும் பயிற்சியாளர் கராத்தே சங்கர் பிளாக் பெல்ட் 8 வது டிகிரி ஜப்பான் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களை புதுக்கோட்டை எஸ் கே டபிள்யு எப் மாவட்ட தலைமை பயிற்சியாளர்கள் மாஸ்டர் குமார், ஜெயராமன் மற்றும் பொற்றோர்கள் பொதுமக்கள் மாணவர்களை பாராட்டி உள்ளனர்.
The post திருச்சியில் நடந்த கராத்தே கருப்பு பட்டை போட்டியில் புதுகை மாணவர்கள் தேர்வு appeared first on Dinakaran.