பொன்னமராவதி அருகே பிடாரம்பட்டி அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு கல்வி திலகம் விருது

 

பொன்னமராவதி,செப்.18: பொன்னமராவதி அருகே பிடாரம்பட்டி அரசு பள்ளி தலைமையாசிருக்கு கல்வித் திலகம் விருது வழங்கப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெற்ற விழாவில் ஏனாதி ஊராட்சி பிடாரம்ட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பார்த்தசாரதியின் கல்விச்சேவை மற்றும் பள்ளி வளர்ச்சிக்கு அவரது பங்கு என ஒட்டுமொத்த மாணவர்களின் வளர்ச்சிக்கு அவரது அயராது பங்களிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக கல்வித் திலகம் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது பெற்ற தலைமையாசிரியர் பார்த்தசாரதிக்கு பொன்னமராவதி முத்தமிழ் பாசறைத்தலைவர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளியின் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post பொன்னமராவதி அருகே பிடாரம்பட்டி அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு கல்வி திலகம் விருது appeared first on Dinakaran.

Related Stories: